பெரிய வியாழனையாெட்டி தூய சவேரியார் பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
பெரிய வியாழனையொட்டி பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லையில் பெரிய வியாழனையொட்டி பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்பாக 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் துவங்கும் புதன்கிழமையன்று குருத்தோலை சாம்பல் நெற்றியில் பூசப்படுவதால் அந்நாளை சாம்பல் புதன் என்றழைக்கின்றனர். ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ணும் நோன்பை கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதன் ஒரு நிகழ்வாக பெரிய வியாழனை முன்னிட்டு. இயேசு தனது சீடர்களின் கால்களை கழுவியதை நினைவுகூறும் வகையில், கத்தோலிக்க ஆலயங்களில் ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள், சபையின் மூப்பர்களது பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் பெரிய வியாழனையொட்டி மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் அவர் 12 பொது நிலையினரின் பாதங்களைக் கழுவி, தனது பணிக்குருத்துவத்தின் தாழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை பல்வேறு குழுக்களாக மக்கள் நற்கருணை ஆராதனை நடத்தினர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு பிரார்த்தனையை மேற்கொண்டனா். அதனை தொடர்ந்து புனிதவெள்ளி அன்று சிலுவைப்பாதை ஊர்வலமும், தொடர்ந்து பேராலயத்தில் பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. சனிகிழமை நள்ளிரவில் ஈஸ்டர் பெருநாள் சிறப்புத் திருப்பலி நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.