தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைப்பிரிவினர் கொடி அணிவகுப்பு

தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க நெல்லையில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைப்பிரிவினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்

Update: 2021-03-20 07:51 GMT

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்கு அளிக்க வேண்டும் என்று நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வுகளை மாநகர காவல் துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நெல்லை டவுன் பகுதியில் மாநகர துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில், மாநகர காவல் துறை சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில், கண்ணீர் புகை குண்டுவீசக்கூடிய ஆயுதங்களுடன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படைபிரிவு நடத்திய அணிவகுப்பு, நெல்லையப்பர் கோவிலில் ஆரம்பித்து டவுண் நான்கு ரதவீதிகள், தொண்டர் சன்னதி , பாளையடி வரை  சென்றது. பாளையடி ஊர் பொதுமக்களிடம் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அணிவகுப்பில் டவுண் உதவி ஆணையாளர் சதீஷ்குமார், ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு, டவுண் ஆய்வாளர் இராமேஸ்வரி மற்றும் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், ஆயுதப்படை காவலர்கள் உட்பட 150 பேர் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News