மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
மேலப்பாளையத்தில் எஸ்டிடியூ கார், வேன், டூரிஸ்ட் கார் கிளையின் தொழிற்சங்கம் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அலீம்நகரில் எஸ்டிடியூ கார், வேன், டூரிஸ்ட் கிளையின் சார்பில், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, கிளை தலைவர் மதினா தலைமை தாங்கினார்.
எஸ்டிடியூ தொழிற்சங்கம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், கிளை செயலாளர் சேக் வரவேற்புரை ஆற்றினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி, கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி, மாவட்ட பொதுச்செயலாளர் பர்கிட் அலாவுதீன் தொழிற்சங்க மாநகர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிஃப் பாஷா 51மற்றும் 52 வது வார்டின் மாமன்ற உறுப்பினர்கள் நித்திய பாலையா, சுந்தர் மற்றும் மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுல்தான் பாஷா, மாவட்ட செயலாளர் செய்யது, மாவட்ட துணைத்தலைவர் கல்வத், ஆட்டோ சங்க ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக், ஆட்டோ சங்க துணை ஒருங்கிணைப்பாளர் ரசூல் மைதீன், உடலுழைப்பு சங்க துணை ஒருங்கிணைப்பாளர் புதுமனை சிந்தா, மாட்டிறைச்சி சங்க ஒருங்கிணைப்பாளர் மசூது, துணை ஒருங்கிணைப்பாளர் மொன்னா முகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கள், மசூத் மற்றும் அலீம் நகர் கிளையின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக துணை செயலாளர் பாஷா நன்றி உரை ஆற்றினர்.