வ.உ.சிதம்பரனாரின் உருவத்தை மணலால் வரைந்து அசத்திய நெல்லை மாணவிகள்

வ. உ. சியின் 150 வது பிறந்தநாளை குறிக்கும் வண்ணம் 150 சதுரஅடியில் மணலால் அவரது உருவ படத்தை மாணவிகள் வரைந்து அசத்தினர்.

Update: 2021-09-03 13:19 GMT

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மணலில் அவரது உருவத்தை வரைந்து அசத்திய நெல்லை மாணவிகள்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மணலில் அவரது உருவத்தை வரைந்து அசத்திய நெல்லை மாணவிகள்.

சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா வருகிற 5ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்பு பகுதியில் அவரது 150-வது பிறந்த தினத்தை குறிக்கும் வண்ணம் 150 சதுர அடியில் மணலால் அவரது திருவுருவ படத்தை சிவராம் கலைக்கூடத்தை சேர்ந்த இந்துஜா செல்வி, தீக்‌ஷனா ஆகிய இரண்டு மாணவிகள் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் வரைந்து முடித்தனர்.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்ததினால் அவரை மண்ணின் மைந்தர் எனக் குறிப்பிடும் வகையில் எம்.சான்ட், ஆற்று மணல் மற்றும் செம்மண்ணை கொண்டு இந்த ஓவியம் வரையப்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்பு பகுதியில் இந்த ஓவியம் வரையப்பட்டதினால் மாவட்ட ஆட்சியர் ஊழியர்கள் பலர் அவர்களை வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News