பாளையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சிசிடிவி காட்சியால் பரபரப்பு
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
நெல்லை மதுபோதையில் டீக்கடையை தீக்கடையாக்க முயற்சித்த வாலிபர்; நெல்லை நாட்டு வெடி குண்டு வீசிய விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு
நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் சீா்மிகு நகரம் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு இரண்டு வணிக தளங்களுடன் திறக்கப்பட்டது இந்நிலையில் 17ம்தேதி பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள சீனிப்பாண்டி என்பவரது டீக்கடை முன்பு திடீரென அதிக சத்தத்துடன் குண்டு வெடித்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கீழ்தளத்தில் படி ஏறும் இடத்தில் உள்ள சுவரில் குண்டு வெடித்து சிதறியதற்கான தடங்கள் இருந்தது. இரவு நேரத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் சீனிப்பாண்டி கடையில் பணிபுரியும் மணக்கரையை சேர்ந்த சுடலை (25) தான் நாட்டு வெடிகுண்டை வீசியது என தெரியவந்தது. அப்போது சுடலையின் நண்பரான கிருஷ்ணனும் அங்கிருந்துள்ளார் இதையடுத்து போலீசார் சுடலையை அதிரடியாக கைது செய்தனர். மேலும் கிருஷ்ணனையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் சம்பவத்தின் போது சுடலை அதிக மது போதையில் இருந்ததாகவும் போதையில் தனது முதலாளியை பயமுறுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துள்ளார். அப்போது கோயில் திருவிழாக்களில் வான வேடிக்கை போடப்படும் குச்சி வெடி மருந்துகளை கொண்டு வந்து சுடலை வெடிகுண்டு தயார் செய்துள்ளார்.
பின்னர் சுடலை தான் தயாரித்த நாட்டு வெடிகுண்டை டீக்கடை அருகில் இருந்த கட்டிடத்தின் அடித்தள பாதை சுவற்றில் ஓங்கி ஏறிந்துள்ளார். அதில் அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. அடித்தளம் பகுதி என்பதால் அதிக சத்தம் எழுந்துள்ளது. வெடிகுண்டு வீசியதும் சுடலை சாகவாசமாக அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இவை அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் உண்மையாகவே மதுபோதையில் தான் இருவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டனரா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் சுடலையிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்