பார்வையற்றோர் முதியோர் இல்லத்தில் 100% வாக்களிக்க உறுதி மொழி

பாளையங்கோட்டை,பார்வையற்றோர்கான முதியோர் இல்லம் 100% வாக்களிப்புக்கான விழிப்புணர்வு நிகழ்வு.;

Update: 2021-03-23 03:30 GMT

பாளையங்கோட்டை,பார்வையற்றோர்கான முதியோர் இல்லம் 100% வாக்களிப்புக்கான விழிப்புணர்வு நிகழ்வு

மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாந்தி க்ளோரி எமரால்ட் தலைமையில் நடைபெற்றது. பார்வையற்ற முதியோர்களுக்கான 100% வாக்களிக்கப் போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரம் செயல்முறை விளக்கம் பிரெய்லி எழுத்து ஆகியவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

பார்வையற்ற முதியோர்கள் உறுதி மொழி ஏற்றனர் வாக்குப்பதிவு எந்திரம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பழையகோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் மாநகராட்சி ஆணையர் ஜி கண்ணன், பாளையங்கோட்டை வருவாய் வட்டாட்சியர் செல்வன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்வில் துணை வட்டாட்சியர் பழனி, முனைவர் கணபதி சுப்பிரமணியன், பார்வையற்றோர் பள்ளி முதல்வர் கிங்ஸ்டன், வருவாய் ஆய்வாளர் மாரி துரை, சமூக ஆர்வலர்.சு முத்துசாமி, முடநீக்கியல் நிபுணர் பிரபாகரன், இல்லப் பொறுப்பாளர் செல்வின், ஆசிரியை சுகந்தி, ஜோயல், ஸ்டாலின், மாரியப்பன், ஸ்ரீகுமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News