நெல்லையில் டான் சிட்டி லயன்ஸ் சங்கத்தினரின் முப்பெரும் விழா
நெல்லையில் உலக பூமி தினம், தாமிரபரணி நதி பாதுகாப்பு, சாதனையாளர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா டான் சிட்டி லயன்ஸ் சார்பில் நடைபெற்றது.
திருநெல்வேலி டான் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக பூமி தினம், தாமிரபரணி நதி பாதுகாப்பு, சாதனையாளர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை சினேகா மனநல மருத்துவமனை கலை அரங்கில் நடைபெற்றது.
நிகழ்விற்கு டான் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் எம்.சி. ராஜன் தலைமை தாங்கினார். சேவை குழு தலைவர்.லயன். டாக்டர் பன்னீர்செல்வம், பட்டய தலைவர் மற்றும் பொருளாளர் லயன் ஜானகிராமன் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் தேசிய நல்லாசிரியர் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். வருங்கால லயன்ஸ் ஆளுநர் தொழிலதிபர் என்.கே.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.
சங்கர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர் மற்றும் சிட்டி எக்ஸ்னோரா செயலாளர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்ரமணியன் உலக பூமி தினம், தாமிரபரணி நதி பாதுகாப்பு அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். வருங்கால லயன்ஸ் தலைவர் சாத்திராக் கோயில் தாஸ், செயலாளர் ராஜன் பொருளாளர் பீட்டர் பொன்னையா லயன்ஸ் சங்க இயக்குனர் லாரன்ஸ் சங்க உறுப்பினர்கள் ஜவஹர் ராஜ், கவிஞர் முத்துவேல் மற்றும் வழக்கறிஞர் சகாயம் தர்மராஜ் கவிஞர் செல்வராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பல்லாண்டுகளாக கல்வி பணி, சமுதாயப் பணி ஆற்றி வரும் சாதனையாளர்கள் சங்கர் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியை து.நான்சி, நாட்டுநலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகசாமி, விலங்குகள் நல பராமரிப்பாளர் வீரவநல்லூர் சேவையாளர் கோமதி சங்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்.முனைவர்.வ. ஹரிஹரன், வி.கே.புரம் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் பட்டிமன்ற பாவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக லயன்ஸ் இயக்குனர் சோமு நன்றி கூறினார்.