நெல்லையில் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக விவகாரத்தில் பாஜக எப்போதுமே நடுநிலையாக நடந்து கொள்ளும் என்றார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

Update: 2022-07-05 10:30 GMT

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ நைனார்நாகேந்திரன்

தமிழ்நாட்டை பாண்டியநாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும். அப்போது தான் நிர்வாக ரீதியாக தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை பெற முடியும். அதிமுக விவகாரத்தில் பாஜக எப்போதுமே நடுநிலையாக நடந்து கொள்ளும் என்றார் நெல்லை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்.

தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நெல்லை சட்டமன்ற பாஜக உறுப்பினரும், பாஜக சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  பேசுகையில், தமிழகத்திற்கு தமிழ்நாடு வேண்டும் என்று ஆ.ராசா கூறுகிறார். ஏன் நான் சொல்கிறேன் தமிழ்நாட்டை பாண்டியாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும். ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளது. எனவே தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும். தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு எதுவும் இல்லை அதிமுக விவரத்தில் பாஜக எப்பொழுதுமே நடுநிலையாக தான் செயல்படும்.

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குடிபோதைக்கு அதிகமான அடிமைகள் இருப்பது தமிழ்நாட்டில் தான். பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் பீர் பாட்டில் உடன் தற்போது நடமாடுகிறார்கள். வரக்கூடிய நாட்களில் இது குறித்த கவலை அனைவருக்கும் இருக்கிறது. இன்னும் நான்கு ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தால் தமிழ்நாடு நிச்சயம் குடிகாரர்களின் நாடாக மாறிவிடும்.

நெல்லை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் ஏழு பேர் கஞ்சாவுக்காக பலியாகி உள்ளனர். மாநகர் பகுதியான பாளையங்கோட்டை மற்றும் தாழையூத்து பகுதியில் அதிக அளவு கஞ்சா விற்பனையாகி வருகிறது. தயவு செய்து இதை தடுத்து நிறுத்துங்கள் என்று தெரிவித்தார்.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை வகித்தார். சுரேஷ் மாவட்ட பொதுச் செயலாளர், வேல் ஆறுமுகம் மாவட்ட பொதுச் செயலாளர், முத்து பலவேசம் மாவட்ட பொதுச் செயலாளர், மணிகண்டன் பாலை மேற்கு நகர் மண்டல தலைவர் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News