நெல்லை- காங்கிரஸ் சார்பில் கோவில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம்

நெல்லை- காங்கிரஸ் சார்பில் கோவில்,மசூதி,கிறிஸ்தவ ஆலய பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.;

Update: 2021-06-02 08:50 GMT

காங்கிரஸ் சார்பில் கோவில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம்

நெல்லை- மாநகர் மாவட்ட  காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோவில் ,மசூதி,கிறிஸ்தவ ஆலய பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கபட்ட கோவில் பூசாரிகள்,பள்ளிவாசலில் வாங்கு ஓதுவார்கள், கிறிஸ்தவ ஆலய பணியாளர்கள் என மொத்தம் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் ஏற்பாட்டில், முன்னாள் மத்திய அமைச்ச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் 100 பேர்களுக்கு அரிசி,பலசரக்கு சாமான்கள், காய்கறி போன்றவற்றை வழங்கினார்.

Tags:    

Similar News