கொரோனா கால கல்வி கட்டணமே இந்த ஆண்டும் தொடர வேண்டும் - ஜி.கே. வாசன்
தமிழக அரசு கொண்டு வந்துள்ள கொரோனா கால கல்வி கட்டணத்தை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.
கொரோனா பரவலால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுழற்சி முறையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதோடு மருத்துவக் குழுவிடம் மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். என நெல்லையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் பேட்டி.
நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக தேர்தலில் கட்சி போட்டியிடுவது தொடர்பாகவும், வெற்றி வாய்ப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கூறியதாவது:-
தமிழக அரசு கொண்டு வந்துள்ள கொரோனா கால கல்வி கட்டணத்தை இந்த ஆண்டும் தொடர வேண்டும். கல்வி கட்டணம் செலுத்த மூன்று தவணைகளாக பிரித்து கட்டுவதற்கான வழி வகையை அரசு செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மீள் பாதையை பூமிக்கு அடியில் பதிக்கும் திட்டத்தை கொண்டு வர வேண்டும். ஸ்மார்ட் சிட்டிகளில் நவோதயா பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் நவோதயா பள்ளியை விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் தமிழக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள் கிடைக்காமல் மக்களுக்கு ஏமாற்ற நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த அதிமுக அரசு ரத்து செய்த விவசாயி கடன் உள்ளிட்டவைகள் போல தற்போதைய திமுக அரசும் கடன் ரத்து செய்ய வேண்டும். புதிய கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு தற்காலிகமானது. சர்வதேச அளவில் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகள் உள்ளதாகவும், மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விரைவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். தற்போதைய நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், பாரபட்சம் இன்றி ஆளும் அரசு ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொகுதி வரையறையில் பல்வேறு குழப்பம் நிறைந்துள்ளதாகவும், ஆளுங்கட்சி வெற்றிக்கு ஏதுவாக வார்டு வரையறை செய்யப்பட்டுள்ளதோ என்ற அச்சம் எதிர்க்கட்சிகளுக்கு எழுந்துள்ளது என தெரிவித்தார். தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மத்தியில் பாஜகவுடன், மாநிலத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். தமிழகஅரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படக் கூடாது.
கொடநாடு விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டுமே தவிர அரசு சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் சொன்னதை போல பெட்ரோல் விலையை மாநில அரசு மேலும் குறைக்க வேண்டும். டீசல் விலையையும் மாநில அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி திறப்பு காண கோட்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா நோய் பரவல் என்ற செய்தி எழுந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளில் சுழற்சிமுறையில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பண்டிகை காலம் வருவதால் பள்ளி, கல்லூரிகளில் தேவயான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மீண்டும் மருத்துவக் குழுவிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.