வழிபாட்டு தலங்களுக்கு மாஸ்க், சானிடைசர் வழங்கி கொரோனா விழிப்புணர்வு
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி சார்பில் சதக்கத் கிராம மேம்பாட்டு திட்டம் மூலம் கொரோனா மூன்றாவது அலை விழிப்புணர்வு நிகழ்ச்சி.;
கொரானா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாஸ்க், சானிடைசர் வழங்கபட்டது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி சதக்கத் கிராம மேம்பாட்டு திட்டம் மூலம் கொரோனா மூன்றாவது அலை மற்றும் டெல்டா பிளஸ் வகை கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாநகரத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வழிபாட்டு தலங்களில் பணி புரியும் மத போதகர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். SOP ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் முஹம்மது ரில்வான் மற்றும் SOP மேலாளர் முகம்மது ராசிக் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.