கொரோனா 3வது அலை தடுப்பு : செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு பயிற்சி

அரசு மருத்துவமனையில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு செயல் முறைகளை செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

Update: 2021-08-04 13:58 GMT

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க வலியுறுத்தி உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி குழந்தைகள் நல மருத்துவ பிரிவு இணை பேராசிரியர் வெங்கட சுப்ரமணியன் மூன்றாம் அலை கொரோனா தடுப்பு செயல் முறைகளை செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு விளக்கினார். வார்டுகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு நலக்கல்வி எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிடைஸர் போன்றவற்றின் அவசியம் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் நல உதவி மருத்துவர் சங்கரலிங்கம் கலந்து கொண்டார். நிறைவாக செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சாந்தி இருதயராஜ் தலைமையில் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News