வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சிக்குச் சென்ற காவலர் உயிரிழப்பு

வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் காவலர் ஓட்டப்பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2024-08-08 02:39 GMT

வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் காவலர் ஓட்டப்பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் வல்லநாடு பகுதியில் துப்பாக்கி சுடும் தளம் அமைந்துள்ளது. இங்கு காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி,கமாண்டோ பயிற்சி உட்பட ஏராளமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

தென்காசி மாவட்டம் குலசேகர கோட்டையை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் பசுபதி மாரி வயது 28. இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் திருமணமானது. இவருக்கு மாரிசெல்வி என்ற மனைவி உள்ளார்.

இவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று  காலை அவர் ஓட்ட பயிற்சியில் ஈடுபடும்போது கீழ வல்லநாடு வாட்டர் டேங்க் அருகே செல்லும்போது மயங்கி விழுந்துள்ளார். உடனே உடன் இருந்த காவல்துறையினர் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பசுபதி மாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.ஓட்ட பயிற்சியின் போது காவலர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News