பாளையங்கோட்டையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையில் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகன் தலைமையிலான குழு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது கேடிசி நகர் பகுதியில் இருந்து மோட்டார்பைக்கில் வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முருகன் என்பவரிடம் இருந்து உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ. 5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.ஏற்கனவே கடந்த 2 தினங்களுக்கு முன்பு இதே நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியரிடம் இருந்து ரூபாய் 28 லட்சம் பணத்தை பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.