சமூக வலைதள பிரச்சார கண்காணிப்பு அறை திறப்பு

Update: 2021-03-25 05:30 GMT

திருநெல்வேலியில் அரசியல் கட்சியினரின் சமூக வலைத்தளம் பிரச்சாரத்தை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான விஷ்ணு, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிகளின்படி அரசியல் கட்சியினர் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளும் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு சமூகவலைதள கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News