நெல்லையில் இயற்கை வேளாண் விற்பனை அங்காடி ஆட்சியர் திறந்து வைப்பு

நெல்லையில் இயற்கை வேளாண் விற்பனை அங்காடி ஆட்சியர் விஷ்ணு திறந்துவைத்தார்.

Update: 2022-01-21 07:07 GMT

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி எதிரில் இயற்கை வேளாண் விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு திறந்துவைத்தார். 

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி எதிரில் இயற்கை வேளாண் விற்பனை அங்காடி இன்று திறக்கப்பட்டது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு திறந்துவைத்தார்.

இந்த அங்காடியில் மலைத்தேன், நாட்டு நெல்லிக்காய், பாரம்பரியமிக்க அரிசி வகைகள், நாட்டுக்கோழி முட்டை, மாப்பிள்ளை சம்பா அரிசி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மட்டுமே இந்த அங்காடியில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாபநாசம், காரையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள காணி மக்கள் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், தேன் உள்ளிட்ட பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு நிருபர்களுக்கு பேட்டியில், இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இந்த அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள காணி மக்கள் உற்பத்தி செய்யக்கூடிய உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மலைத்தேன் உள்ளிட்ட இங்கு தனியாக ஒரு கடையில் விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் தொற்று கடந்த சில தினங்களாகவே 700க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாளையங்கோட்டை காந்திமதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்வதற்காக மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை இருந்தாலும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து கண்டிப்பாக வெளியே வர வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி வருவாய் அலுவலர்கள், காவல்துறையினர் கொண்டு தனிக்குழு உள்ளிட்ட அதிகாரிகளை கொண்டு தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறோம். முக கவசம் அணிய வில்லை என்றால் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News