நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலாேசனை
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் 2293 பதவிகளுக்காக நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பழனி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 277 தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வேட்புமனுத்தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவது, குறித்தும் தேர்தலின் போது வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட உள்ள 1188 வாக்குச்சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிப்பது, வாக்குப்பதிவின் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 6 லட்சத்து 73 ஆயிரத்து 867 வாக்காளர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை செய்வது, ஆயிரம் நபர்களுக்கு மிகாமல் தேர்தலில் வாக்களிக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் அதற்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.