தூய சவேரியார் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி முகாம்

பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி முகாம் ஐந்து நாட்கள் நடைபெற்றது.;

Update: 2022-07-09 02:15 GMT

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள்.

நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி முகாம் கல்லூரியில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரியின் துணை முதல்வரும் ஆகிய அருட்தந்தை அருள் ரவி வரவேற்றார். தூய சவேரியார் கலைமகனைகளின் அதிபர் அருட்பணி ஹென்றி ஜெரோம் ஆசியுரை வழங்கினார். கல்லூரி செயலர் அருட்பணி புஷ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் அருட்பணி மரிய தாஸ் மாணவர்களை வாழ்த்தி பேசி சான்றிதழ்களை வழங்கினார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி முகாம் 5 நாள்கள் நடைபெற்றது. பேராசிரியர் மதன்குமார் நன்றி கூறினார். இப்பயிற்சி முகாம்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ரில்பட் ஜனார்த்தன், பிரின்ஸ் ஜெபராஜ், ஸ்டெல்லா, சாந்தகுமாரி, அமல ராயன், ஜெயக்குமார், தமிழினியன் மற்றும் செண்பகராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News