குடிமைப்பொருள் வழங்கல் மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நெல்லை அன்பு நகரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் மேலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-25 09:44 GMT

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய குடிமைப்பொருள் வழங்கல் மேலாளர் வீடு.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவர் தற்போது மதுரையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கு துறை மண்டல மேலாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது.

சுகுமார் கணபதி 2015 லிருந்து 20 வரை 50 லட்ச ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சுதா தலைமையில் பாளையங்கோட்டையில் உள்ள அன்பு நகர் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கலால் உதவி ஆணையாளராக சுகுமார் பணிபுரிந்தபோது, அதிகமாக டாஸ்மார்க் கடைகளில் இருந்து லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த வழக்குகள் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை காலை 7 மணிக்கு துவங்கி 11 மணி வரை நடைபெற்று வந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News