சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

நெல்லை வண்ணாரப்பேட்டையில் சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-01-24 13:31 GMT

நெல்லை வண்ணாரப்பேட்டையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூய்மை பணியாளர்களை தனியாரிடம் விடும் அரசின் முடிவை கண்டித்தும், தினக்கூலி சுய உதவி குழு ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஊதியம் சட்டப்படி அரசு அமைத்துள்ள தினசரி ரூபாய் 700 சம்பளத்தை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிறைவேற்றவேண்டும். தினக்கூலி சுய உதவி குழு ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போதுமான தூய்மை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் ஆட்களை குறைக்கக்கூடாது. தூய்மை பணியாளரிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தையும், நிர்வாகம் செலுத்த வேண்டிய ஈ பி எஃப் பணத்தையும் முழுமையாக ஈபிஎப் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அனைத்து தூய்மை பணியாளருக்கும் சீருடை வழங்க வேண்டும். முன் களப்பணியாளர் அறிவிக்கப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு தொற்றுக்கான நிவாரண நிதியாக ரூபாய் 15,000 உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மோகன் கூறும்போது

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் இன்று போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக அரசு இதுவரை தூய்மை பணியாளர்களை கண்டுகொள்ளவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை  அடுத்த மாதம் நடத்துவோம் ஈடுபடுவோம் என்றார்.

Tags:    

Similar News