பாளையங்காேட்டை அரசு அருங்காட்சியகத்தில் பாரதி நினைவு நூற்றாண்டு லோகோ வெளியீடு

பாரதி நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட லோகோவை நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி வெளியிட்டார்.

Update: 2021-08-16 13:25 GMT

பாளையங்காேட்டை அரசு அருங்காட்சியக திறந்த வெளி அரங்கில் சுதந்திர நாள் கவியரங்கமும், பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்கான லோகோ வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்காேட்டை அரசு அருங்காட்சியக திறந்த வெளி அரங்கில் சுதந்திர நாள் கவியரங்கமும், பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்கான லோகோ வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வரவேற்புரை வழங்கினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தலைமையுரை ஆற்றினார்.

வருகிற செப்டம்பரில் நடைபெற இருக்கும் பாரதி நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்டுள்ள லோகோவை நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி வெளியிட அரும்புகள் அறக்கட்டளை நிறுவனர் முனைவர். இராஜ மதிவாணன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து முன்னாள் மேயர் புவனேஸ்வரி விழாப் பேருரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து கவிஞர் பாப்பாக்குடி அ.முருகன் நெறியாளராக இருந்து 75-நிமிட தொடர் சுதந்திர நாள் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, கல்லிடைக்குறிச்சி, நாங்குநேரி, இராதாபுரம் உட்பட பல ஊர்களில் இருந்து கவிஞர் வருகை தந்து சுதந்திர நாள் கவிதையினை வாசித்தனர். நிறைவாக கவிஞர் சுப்பையா நன்றி கூறினார்.

Tags:    

Similar News