நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு

அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் கவிதை போட்டிகள் நடைபெற்றது.

Update: 2021-09-11 13:42 GMT

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்கமாக மருத்துவர் பிரேமச்சந்திரன் முன்னிலையில் பாரதியாரின் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை தாங்கினார். பேராசிரியர் கட்டளை கைலாசம் முன்னிலை வகித்தார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தொடக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து மருத்துவர் பிரேமச்சந்திரன் பாரதியார் பாடல்களைப் பாடி இசையஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து "நூறாண்டு கடந்தும் பாவாண்டு நிற்கும் பாரதி "என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பான கவிதையை வழங்கியவர்களுக்கு பாரதி நினைவுகள்-100 என்ற நிகழ்ச்சியில் பாரதி பைந்தமிழ்ச் சுடர் என்ற விருதுகள் வழங்கப்படுகிறது என அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.

Tags:    

Similar News