உலக வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு: நெல்லையில் கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி

உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக நடைபெற்ற பேரணியில் மாணவர்களுடன் ஆட்சியர் விஷ்ணு சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2022-04-22 05:20 GMT

உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக நடைபெற்ற பேரணியில் மாணவர்களுடன் ஆட்சியர் விஷ்ணு சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக நெல்லையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பங்கேற்று மாணவர்களுடன் சைக்கிளில் பேரணியாக சென்றார்.

உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் கல்லூரியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு கொடியசைத்து இந்த பேரணியை துவக்கி வைத்தார். மேலும் கல்லூரியின் முதுகலை மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவும் சைக்கிளில் பேரணியாகச் சென்றார். கல்லூரியில் தொடங்கிய சைக்கிள் பேரணி நீதிமன்றம் வழியாக கேடிசி நகர் மேம்பாலம் வரை அனைவரும் பேரணியாக சென்று பின்னர் மீண்டும் அங்கிருந்து கல்லூரி வரை வந்தனர். சேவியர் கல்லூரி முதல்வர் ஜெரோம் ரெக்டர் மரியதாஸ் உள்ளிட்ட பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். நெல்லையில் வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Tags:    

Similar News