நெல்லையில் புத்தகக் கண்காட்சியையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஓவியம்

நெல்லையில் நடைபெறும் புத்தக கண்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியம் வரையும் நிகழ்வு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது.

Update: 2022-03-13 11:48 GMT

புத்தகக்கண்காட்சி குறித்த விழிப்புணர்வு ஓவியம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 17-ம் தேதி பாளையங்கோட்டை வ. உ. சி மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. வரும் 28- ந் தேதி வரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், புத்தக கண்காட்சி குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் வ.உ.சி மைதானத்தில் சேரன்மகாதேவி கவின் கழகம் சார்பில் மாபெரும் ஓவிய விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு இலக்கியவாதிகள், படைப்பாளிகள், இயற்கை, புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களை வரைந்தனர்.

மேலும் தலை சிறந்த புத்தகங்கள் வாசிப்பின், நன்மைகள் ஆகியவை குறித்தும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த விழிப்புணர்வு ஓவியத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.

Tags:    

Similar News