சிறுவர்கள் காப்பகத்தில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு
பெருமாள்புரம் சிறுவர்கள் காப்பகத்தில் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநகர காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் உத்தரவின் பேரில், நெல்லை மாநகரகிழக்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார், CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவ- மாணவிகளுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பெருமாள்புரத்தில் உள்ள Bright life சிறுவர்கள் காப்பகத்தில் குழந்தை தடுப்பு பிரிவு (ACTU) காவல் ஆய்வாளர் ஜெகதா போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கி சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.