புத்தாண்டை முன்னிட்டு மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஓவியப்போட்டி
பாளையங்கோட்டையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிவராம் கலைக்கூடம் ஓவிய மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.;
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பள்ளி படிப்பில் செல்போன் பயன்படுத்துவது குறித்து மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஓவியப் பள்ளி மாணவ- மாணவியர்கள், கல்வி பயில செல்போன்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஓவிய போட்டியில் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் பங்கேற்ற மாணவ- மாணவியர், வாழைமட்டை தட்டில் செல்போன் குறித்தும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும், ஓவியங்களாக வரைந்து விளக்கினர். ஒவ்வொருவரும் வரைந்த ஓவியங்களை புத்தாண்டை வரவேற்கும் விதமாக, 2022 என்ற வடிலும் ஓட்டினர்
அருங்காட்சியக காப்பாளர் சிவசக்தி வள்ளி தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். செல்போனை கல்விக்கு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஓவியத்தை வாழை மட்டை தட்டுகளால் உருவாக்கிய மாணவ-மாணவிகளுக்கு, நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.