சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்களிப்பு செய்தவர்களுக்கு விருது
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு முதலைமச்சர் பசுமை முதன்மையாளர் விருதினை மாநில அளவில் 100 பேருக்கு வழங்கியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதினை தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தலைவர் அப்பாவு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதினை மாவட்ட அருங்காட்சியகத்தில் நடந்த விழாவில் வழங்கினார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவ தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுச்சூழலை பேணிகாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் துணிப்பை தான் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டுவந்து செயல் படுத்திவருகிறார். அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமாக வாழவேண்டும் என்ற என்னத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நமது மாவட்டத்தை பெருமைபடுத்தும் விதமாக் தூய பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் துவங்க உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பான பங்களிப்பு ஆற்றியவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு முதலைமச்சர் இந்த பசுமை முதன்மையாளர் விருதினை மாநில அளவில் 100 பேருக்கு வழங்கி சிறப்பித்துள்ளார். நமது மாவட்டத்தில் உள்ள வற்றாத ஜீவநதியான தாமிரபரணி தண்ணீரை குளிக்கும் தரத்திலிருந்து குடிக்கும் தரத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மரங்கள் நடும் வழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றும், பருகும் குடிநீரும் சுத்தமாக கிடைப்பதற்கு மரம் முக்கிய பங்காற்றுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பசுமை முதன்மையாளர் விருது ஒவ்வொரு வருடமும் உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை கொண்டதாகும்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு தமிழக அரசால் மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டு இன்று வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எம்.மதிவானன், ஒருங்கிணைப்பாளர் அசோகா ட்ரஸ்ட் (அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வழ காப்பு மையம்) பொன்னையா, தலைமை ஆசிரியர், அரசுமேல்நிலைப்பள்ளி மருதகுளம், டாக்டர்.எ.திருமகள், ஆகிய மூவருக்கும் தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையுடன் விருதுகளையும் சட்டமன்றப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
முன்னதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஓய்வு திருநாவுக்கரசு நீர்வளம் பற்றிய கருத்துரை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கூ.பொ) தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு மையம் செ.சுயம்பு தங்கராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சாந்தி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் நக்கீரன்அவர்கள், வட்டாச்சியர்கள் செல்வன்(பேரிடர் மேலாண்மை),சண்முக சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.