நெல்லையில் தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியல்.

Update: 2021-08-31 12:43 GMT

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் துவக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதை தொடர்ந்து சட்டப்பேரவையை புறக்கணித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து நெல்லை  மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா  தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் வண்ணார்பேட்டை பகுதியில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . சாலை மறியலில் ஈடுபட்ட  அதிமுகவினர் போலீசார் கைது.

Tags:    

Similar News