கைதி முத்து மனோ கொலையால் 6 பேர் பணியிடை நீக்கம்
-சிறைத்துறை டிஐஜி நடவடிக்கை
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் 22.04.2021 அன்று கைதிகளுக்குள் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் மூன்றடைப்பு வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துமனோ என்பவர் உயிரிழந்தார். சிறைக்குள் நடந்த இப்பிரச்சனையினால் சிறையில் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது சிறைத்துறை மூலம் துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறை அலுவலர்கள் துணை சிறை அலுவலர் சிவனு, உதவி சிறை அலுவலர்கள் சங்கரசுப்பு பிள்ளை, கங்காராஜன், ஆனந்தராஜ், முதல் தலைமை காவலர்(Chief warden) வடிவேல் முருகையா, சிறைக் காவலர் (warden) சாம் ஆல்பர்ட் ஆகிய ஆறு நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.