44-வது ஒலிம்பியாட் போட்டி: மனித வடிவிலான விழிப்புணர்வு முன்னோட்ட சதுரங்க போட்டி

மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை 44- வது ஒலிம்பியாட் செஸ் போட்டியையொட்டி விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது

Update: 2022-07-22 15:30 GMT

பாளையங்கோட்டையில் மனித வடிவில் சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்

44-வது ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி குறித்து நெல்லையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித வடிவிலான சதுரங்க போட்டி அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10- ம் தேதி வரை 44- வது ஒலிம்பியாட் செஸ் போட்டி நடக்கிறது. இதில் 188 நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பேருந்து நிலையம் மக்கள் அதிகம் கூடக்கூடிய பகுதிகளில் கையெழுத்து இயக்கம், ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான சதுரங்க போட்டி இதுபோல பல்வேறு வடிவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் மனித வடிவிலான சதுரங்க போட்டியை கோட்டாட்சியர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். இதில் இருவர் சதுரங்க போட்டியை விளையாட பள்ளி மாணவ- மாணவிகள் பிரம்மாண்டமான சதுரங்க பதாகையில் சிப்பாய்கள் மற்ற பிரிவுகளில் நின்று   விளையாடினர். இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News