நெல்லை அருகே 140 கி குட்கா மூட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது; போலீசார் அதிரடி

பாளையங்கோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 கிலோ குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

Update: 2021-09-14 07:40 GMT

குட்கா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட அலெக்சாண்டர்.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே நெல்லை மாநகர தனிப்படை காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் குட்கா மூட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகே உள்ள ஐஆர்டி பாலிடெக்னிக் அருகே ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது அங்கு 140 கிலோ எடை கொண்ட குட்கா மூட்டை, மூட்டையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குட்கா பதுக்கி வைத்திருந்ததாக பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்யப்படுவதை காவல்துறையின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இதன் மூலம் நெல்லை மாநகர பகுதியில் 140 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அலெக்சாண்டர் என்பவரை கைது செய்துள்ளோம். இவருடன் கூட்டாளியாக இருந்தவர் கடந்த வாரம் குட்கா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News