நெல்லையில் நடந்த வாகன சோதனையில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நெல்லையில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது 1,250 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாநகரம் மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் உதவி ஆய்வாளர் பாத்திமா பர்வீன் மற்றும் தலைமை காவலர் ஜெய்சங்கர் ஆகியோர் மேலப்பாளையம் வி எஸ் டி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு லோடு ஆட்டோவை சோதனை செய்ததில், எந்தவித ஆவணமின்றி சுமார் 1250 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய சென்றது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணையில் திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த துரை என்ற பட்டாணி என்பதும் லோடு ஆட்டோவில் 1250 கிலோ ரேஷன் அரசி கடத்தியதும் தெரிய வந்தது.
மேலப்பாளையம் போலீசார் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை வாகனத்துடன் குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.