நெல்லையில் வியக்க வைக்கும் 1 1/4 வயது குழந்தை: 7 சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பு

1 1/4 வயது குழந்தை 150க்கும் மேற்பட்ட படங்களை அடையாளம் காட்டியும், அதன் பெயர்களைச் சொல்லியும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.;

Update: 2021-09-08 14:46 GMT

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த குழந்தை சகாய காஸ்ட்ரோ உடன் பெற்றாேர்.

நெல்லையில் 30 தலைவர் பெயர்கள், விலங்குகள், பறவைகள் படங்களை பார்த்து அப்படியே சொல்லும் 1 1/4 வயது சிறுவன் விரைவில் கின்னஸ் சாதனை படைக்க போவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த டெரன்ஸ் பர்ணாந்து, ரெபேக்கா தம்பதியரின் மகன் சகாய காஸ்ட்ரோ ஒரு வயது நான்கு மாதம் மட்டுமே ஆன குழந்தை பல்வேறு விலங்குகள், பறவைகள், பழங்கள், பூக்கள் மற்றும் தலைவர்கள் என 150 க்கும் மேற்பட்ட படங்களை அடையாளம் காட்டியும், அதன் பெயர்களைச் சொல்லியும், அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

இவர் INDIAN BOOK OF WORLD RECORDS, INTERNATIONAL BOOK OF WORLD RECORDS, KALAM BOOK OF WORLD RECORDS, BRAVO INTERNATIONAL BOOK OF WORLD RECORDS, WONDER BOOK OF WORLD RECORDS, UNIVERSAL RECORDS FORUM உள்ளிட்ட 7 சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். குழந்தை பருவத்தில் அதிகமான சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததால் INDIAN BOOK OF WORLD RECORDS, INDIAN KID OF THE YEAR 2021 என்ற விருதை கொடுத்து சிறப்பித்துள்ளது.

மேலும் விரைவில் கின்னஸ் சாதனை படைக்கப் போவதாக பெற்றோர் தெரிவித்தனர். ஒரு வயது குழந்தை அம்மா, அப்பா, மாமா என்று கூறுவது வழக்கமாக இருக்கும். ஆனால் 1 1/4 வயதே ஆகும் குழந்தை சகாய காஸ்ட்ரோ தமிழகத்திலுள்ள புரட்சித்தலைவி அம்மா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அறிஞர் அண்ணா, இந்திரா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் படத்தை காண்பித்தால் உற்சாகமாக அவர்கள் பெயரை சொல்வது ஆச்சரியமாக உள்ளது. அதேபோல பழங்களில் பெயரையும், பறவைகள், விலங்குகள் பெயரையும் மழலையில் தெளிவாக சொல்வது ஆச்சரியமாக உள்ளது.

குழந்தை சகாய காஸ்ட்ரோவின் தந்தை மற்றும் தாயார் கூறியதாவது:- என்னுடைய மகன் சகாய கேஸ்டோ 6 மாத குழந்தையாக இருக்கும்போது அவனுக்கு ஐக்யூ பவர்இயற்கையாகவே இருப்பது தெரியவந்தது. தற்போது ஒன்னேகால் வயதாகிறது. தன்னுடைய மகனுக்கு இயற்கையாவே ஏதோ ஒரு பவர் இப்போது என்பதை தெரிந்து நாங்கள் அவனுக்கு ஒரு சில வார்த்தைகளை சொல்லி காெடுக்க ஆரம்பித்தோம்.

அதையெல்லாம் ஞாபகம் வைத்து அடுத்தடுத்த நாட்கள் எங்களிடம் அதை கூறுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். நாங்கள் தலைவர்கள் பெயர், பழங்கள், வாகனங்கள் போன்ற விளையாட்டுப் பொருட்களை வைத்து ஒரு முறை சொல்லிக் கொடுத்தால் அதை அப்படியே மெமரி செய்து திரும்பக் கேட்டால் உடனடியாக சொல்வான். என்னுடைய பையனுக்கு எந்த விஷயத்தையும் அழுத்தம் கொடுக்கவில்லை எது எது அவன் விரும்புகிறோமோ அதைத்தான் செய்யவேண்டும் என நினைக்கிறோம். அடுத்ததாக கின்னஸ் ரெக்கார்டு பண்ண வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

தாயார் கூறும்போது:- என்னுடைய மகன் ஏழு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் புரிய என்னுடைய மகனுக்கு உறுதுணையாக இருப்போம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News