நெல்லை-தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை எம்பி திறந்து வைத்தார்.
நெல்லையில் தனியார் மருத்துவமனையில் கொரனோ சிகிச்சை மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திறந்து வைத்தார்.
நெல்லையில் கூடுதலாக மேலும் ஒரு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தவிர 11 தனியார் மருத்துமனையில் கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது, இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் இயங்கிவரும் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் தனியார் மருத்துவமனையில் தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி மண்டல் சார்பில் புதிதாக கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் இந்த புதிய சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்தார். இங்கே கொரோனோ சிகிச்சைக்காக மொத்தம் 50 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 3 படுக்கைகள் தீவிர சிகிச்சை படுக்கைகள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி மண்டலம் சார்பில் இந்த புதிய கொரோனா சிகிச்சை மையத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் தனியார் ஆக்ஸிஜன் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் கிடைக்க அரசு உதவி செய்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த கொரனோ சிகிச்சை மையத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் உள்பட பல்வேறு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.