மருத்துவ ஆக்சிஜன் - மருத்துவமனைக்கு வந்தது.

ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.;

Update: 2021-05-17 16:50 GMT
மருத்துவ ஆக்சிஜன் - மருத்துவமனைக்கு வந்தது.
  • whatsapp icon

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 14 ஆயிரம் கிலோ லிட்டர் மருத்துவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது

நெல்லை மாவட்ட அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 800-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே இங்கு ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆக்சிஜனை பெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கொரனா தடுப்பு பணிகளை நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் ஐ பெரியசாமி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் அவ்வப்போது மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு நடத்தி அதனடிப்படையில் தமிழக அரசை வலியுறுத்தி ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து இன்று ரயில் மூலம் தூத்துக்குடிக்கு மருத்துவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது இதில் 15,000 கிலோ லிட்டர் ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. அதில் 14,000 கி.லிட்டர் ஆக்சிஜன் மருத்துமனை வளாகத்தில் உள்ள சேமிப்பு கிட்டங்கியில் நிரப்பப்பட்டது.

மீதமுள்ள ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது நெல்லை அரசு மருத்துவனைக்கு ஏற்கனவே மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனம் தஞ்சாவூர் சென்னை ஸ்டெர்லைட் ஆலை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு கட்டங்களாக ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்தில் இருந்து ஒரே நாளில் 8,000 கி.லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டது இந்த சூழ்நிலையில் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 14 ஆயிரம் கிலோ லிட்டர் மருத்துவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த சில தினங்களுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News