நெல்லை-அரசு சித்த மருத்துவமனைக்கு ரூ 3 லட்சம் மதிப்புள்ள இரத்த பரிசோதனை கருவியை ஆட்சியர் வழங்கினார்.

நெல்லை அரசு சித்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட தானியங்கி இரத்த பரிசோதனை கருவி மூலம் 3 நிமிடத்தில் பரிசோதனை முடியும் என ஆட்சியர் தெரிவித்தார்.

Update: 2021-07-01 11:26 GMT

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 3.12 லட்சம் மதிப்பிலான தானியங்கி இரத்த பரிசோதனை கருவியினை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.


நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 3.12 லட்சம் மதிப்பிலான தானியங்கி இரத்த பரிசோதனை கருவியினை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.
பழைய முறையில் இங்கு இரத்தப் பரிசோதனை மேற்கொள்வதற்கு ஒரு நபருக்கு 1.30 மணி நேரம் தேவைப்பட்டது. தற்போது ரூ. 3.12 லட்சம் மதிப்பில் தானியங்கி இரத்தப்பரிசோதனை கருவி அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் 3 நிமிடங்களில் ரத்தப்பரிசோதனை செய்து முடிக்க முடியும். இக் கருவியின் உதவியுடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், மற்றும் தட்டணுக்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நோய் தொற்றினை மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் பரிசோதனை செய்ய முடியும். இங்கு மருத்துவ பரிசோதனைக்கு வரும் பொது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் திருத்தணி, துணை முதல்வர் மனோகர், உறைவிட மருத்துவர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News