உலக அருங்காட்சியக தின விழாவினை முன்னிட்டு நெல்லை அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் மே ௧௮ ஆம் நாள் உலக அருங்காட்சியக தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .இதனை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் இணைய வழியாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது .
தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். ஆறு ஏழு எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் மொத்தம் 186 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவற்றில் சிறந்த 10 போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
9, 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் மொத்தம் 253 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவற்றுள் 10 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இணையவழியில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்வில் தமிழக அருங்காட்சியகங்கள் பற்றி பரணி வரலாற்று மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் விளக்கப்படங்களுடன் எடுத்துரைத்தார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களில் அமைவிடம் மற்றும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் சிறப்புகளை படங்கள் மூலம் விளக்கமாக விவரித்தார்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மின் சான்றிதழ்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என திருநெல்வேலி அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்தார்.