தமிழகத்தை விட்டே திமுகவை துரத்த வேண்டும்- நடிகை விந்தியா

Update: 2021-03-19 04:15 GMT

திமுகவை தமிழகத்தை விட்டு துரத்தி அடிப்பது தான் நமது வேலை என்று நெல்லை,நாங்குநேரி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பேசினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தச்சை- கணேசராஜா மற்றும் ஜெரால்டை ஆதரித்து நடிகை விந்தியா பாளை மார்க்கெட் அருகே திறந்தவெளி வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பேசுகையில், அதிமுக வேட்பாளர் ஜெரால்டு இங்கேயே பிறந்து வளர்ந்து கல்யாணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொண்டார். எனவே அவருக்கு இரட்டை இலையில் ஓட்டு போடுங்கள். திமுகவினர் கலாட்டா செய்யாத ஒரே கடை சாக்கடை மட்டும் தான். வராத மழைக்கு வானிலை அறிக்கை வாசிப்பதை போன்று வராத ஆட்சிக்கு திமுகவினர் வாக்குறுதி கொடுக்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் எப்படி பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்?

சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது. தயவு செய்து திமுகவை நம்ப வேண்டாம். அவர்கள் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. கொரோனா காலத்தில் மக்கள் கேட்காமலே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்தார். 2011 ல் தமிழகத்தில் 400 ஆம்புலன்ஸ் இருந்தது இன்று 12,000 ஆம்புலன்ஸ் உள்ளது. திமுகவை தோற்கடிப்பது மட்டும் அல்ல அவர்களை தமிழகத்தை விட்டே விரட்டி அடிப்பது தான் நமது வேலை என்று பேசினார்.

Tags:    

Similar News