எஸ்டிபிஐ வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு.;
அமமுக தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் பாளையங்கோட்டை சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகிறார். கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அவர் பிரச்சாரத்தின் முதல்கட்டமாக சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
இதன் ஓர் அங்கமாக ஜமாத்துல் உலமா சபையின் மாநில தலைவர் பி ஏ கே காஜா முகைதீன் பாகவி, மகாசந்நிதானம் பாலபிரஜாபதி அடிகளார் மற்றும் வான் முகில் சட்ட ஆலோசனை மய்யத்தின் நிறுவனரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான வழக்கறிஞர் பிரிட்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அதே போல் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அமமுக மாநகர் மாவட்டச் செயலாளர் பரமசிவ ஐயப்பன், அமமுக அமைப்பு செயலாளர் பால் கண்ணன், தேமுதிக மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச் சந்திப்புகளின் போது எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட துணை தலைவர் ஷாஹுல் ஹமீத் உஸ்மானி, மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகம்மது, புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், தொகுதி நிர்வாகி ஜாபர் இமாம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். இன்று (மார்ச் 17) வேட்பாளர் முகமது முபாரக் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்