சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தச்சை கணேசராஜா மற்றும் ஜெரால்ட் ஆகியோருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தால் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தச்சை கணேசராஜா மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெரால்ட் ஆகியோருக்கு பாளையங்கோட்டை வடக்குப்பகுதி அதிமுக சார்பாக செண்டை மேளங்கள் முழங்க பகுதி கழக நிர்வாகிகள்,வட்டக் கழக செயலாளர்கள், வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இணைந்து உற்சாக வரவேற்பளித்தனர்.