தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு
தேர்தல் பிரச்சாரத்திற்கு வள்ளியூர் செல்லும் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு.;
தேர்தல் பிரச்சாரத்திற்கு வள்ளியூர் செல்லும் வழியில் நெல்லை கேடிசி நகரில், மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன், கழக அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமிபாண்டியன், சுதா பரமசிவம், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர்வேலாயுதம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன், மாநில மகளிர் அணி செயலாளர் விஜிலாசத்தியானந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துச்செல்வி, தர்மலிங்கம், பகுதி செயலாளர் ஜெனி, திருத்து சின்னத்துரை, அக்ரோ நிர்வாக இயக்குனர் உக்கிரபாண்டியன், கே.டி.சி.தினகரன், அரியகுளம் செல்வராஜ், செந்தில் ஆறுமுகம் உட்பட திரளானோர் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.