நெல்லையில் காங்கிரஸ் சமத்துவ பொங்கல்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 4ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது;

Update: 2021-01-12 12:16 GMT

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 4ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வளாகம் முன்பு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக மகளிரணியினர் சர்க்கரைப் பொங்கல் வைத்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு நூறுக்கும் மேற்பட்டோருக்கு பொங்கலுக்கு தேவையான அரிசி,கரும்பு,மஞ்சள் அனைத்து பொருட்களும் வழங்கினர். கட்சியிலுள்ள ஏழ்மையான தொண்டனுக்கு தொழில் துவங்குவதற்கு சைக்கிள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன்,மாநில செயலாளர் செல்வராஜ்,துணைத் தலைவர் செல்லப்பாண்டியன்,சிறுபான்மை துறைத் தலைவர் முகம்மதுஅனஸ் ராஜா,மாவட்ட பொதுச் செயலாளர்கள் சொக்கலிங்க குமார், மனோகரன் மாவட்ட செயலாளர்கள் பரணிஇசக்கி, ரயில்வே கிருஷ்ணன் தச்சை கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர்கள் எஸ்.எஸ்.மாரியப்பன் ஐயப்பன், ரசூல்மைதீன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News