பல்வேறு குற்ற செயல்களில் ஈடுப்பட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மூலக்கரைப்பட்டியில் திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது.
திருட்டு, வழிப்பறி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் குற்றவாளியான பாளையங்கோட்டை வட்டம் கருங்குளம் மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் வானுமாமலை @ குரளி வானுமாமலை(34) என்பவர் திருட்டு, வழிப்பறி மற்றும் கொலைமுயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது. அதன்படி குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி வட்ட காவல் ஆய்வாளர், காளியப்பனுக்கு அறிவுறுத்தினார்.
அதன்பேரில் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், 13.09.2021 இன்று குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.