நெல்லை அருகே கை, கால்களை கட்டி பெண் கொலை: போலீசார் விசாரணை

திருமலை கொழுந்தபுரத்தில் பெண் ஒருவரை கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2022-03-15 06:32 GMT

கொலையான பெண்ணின் உடலை மீட்கும் போலீசார்.

நெல்லை மாவட்டம், பாளையம்கோட்டை அருகே உள்ள திருமலை கொழுந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைக் கண்ணு. இவரது மனைவி மாதா வயது 50. மாதா குளத்து வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து மாதா வீட்டுக்கு வராதததால் அவரது கணவர் கவலை அடைந்தார்.

இரவு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஊருக்கு வெளியே குளம் அருகில் முட்புதரில் மாதா கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண கோலத்தில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறிய தகவலை கேட்டு சுடலைக் கண்ணு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற தாலுகா காவல்துறையினர் மாதாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மாதாவை மர்ம நபர் யாரோ அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது நேற்று மாதா வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு அருகே உள்ள வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். குளித்து விட்டு வரும் வழியில் அருகே உள்ள முட்புதரில் பதுங்கி இருந்த மர்ம நபர் ஒருவர் மாதாவை கட்டையால் தாக்கி முட்புதர் உள்ளே இழுத்து சென்றுள்ளார்.

மேலும் அவர் அணிந்திருந்த துணியை கிழித்து கை, கால், வாய்களை கட்டியுள்ளார். ஆடைகளும் கிழிந்து இருந்தன. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களும், தடயவியல் துறையினரும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. மோப்ப நாய் சிறிது தூரம் சென்று மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்தது. கொலை நடந்த இடத்தில் உள்ள பொருட்களைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்பு போலீசார் உடலை மீட்டு பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதிய வேளையில் ஒரு பெண் கை கால்களை கட்டி மர்மமான முறையில் கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News