நெல்லலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் கைது; போலீசார் அதிரடி

கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இருவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.;

Update: 2021-08-28 15:50 GMT

பைல் படம்.

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி முத்தூர் காமராஜ்நகரை சேர்ந்த வைரமுத்து என்பவரின் மகன் அதிசயபாண்டியன்(46) மற்றும் வாகைக்குளம் நடுத்தெருவை சேர்ந்த சிவகுரு என்பவரின் மகன் தீபக்ராஜா(27). இவர்கள் இருவரும் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.

அதனடிப்படையில் குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர் பத்மநாப பிள்ளைக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் குற்றவாளிகள் மீது குண்டர் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் குற்றவாளி அதிசயபாண்டி என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையிலும், தீபக் ராஜா என்பவரை திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News