சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய நபர் கோர்ட்டில் சரண்

சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருரை நீதி மன்றத்தில் சரணடைந்தார்.,;

Update: 2021-05-06 02:15 GMT

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை(41) என்பவரை கோவிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் முன் விரோதம் காரணமாக கடந்த 18.04.2021 அன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதனடிப்படையில் சீவலப்பேரி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து கொலையில் ஈடுபட்ட *15எதிரிகள் கைது செய்து சிறையில் அடைத்தன மேலும் இக்கொலையில் ஈடுபட்ட எதிரியான சீவலப்பேரியை சேர்ந்த சங்கரபாண்டி என்பவரின் மகன் முருகேசன்(47)* என்பவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். *மொத்தம் இக்கொலை வழக்கில் இதுவரை முருகேசன் உட்பட ௧௬ பேர் சிறையில் உள்ளனர்.

Tags:    

Similar News