களக்காட்டில் எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
அம்பை, சேரை, திசையன்விளை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குளங்களை தூர்வார வேண்டும். எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.கே. பீர்மஸ்தான் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் எம்.எஸ் சிராஜ், மாவட்ட செயலாளர் முல்லை மஜீத், அம்பை தொகுதி தலைவர் சேரை அபூபக்கர், இராதாபுரம் தொகுதி தலைவர் துலுவை தெளபிக், நாங்குநேரி தொகுதி செயலாளர் ஏர்வை ஆசிக், அம்பை தொகுதி செயலாளர் டாடா ஷேக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, இராதாபுரம், திசையன்விளை தாலுகாவிற்கு உட்பட்ட குளங்களை தூர்வார வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். புறநகருக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் செவிலியர்கள் நியமிக்கவும், அம்பாசமுத்திரம் முதல் வள்ளியூர் வரை உள்ள நெஞ்சாலையில் அபாயகாரமான வளைவுகள் இருப்பதால் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை உடனடியாக செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் கல்லிடை சுலைமான் நன்றி கூறினார்.