நெல்லை-ஆவணங்கள் இன்றி கல் ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல்

நெல்லையில் உரிய ஆவணங்களின்றி கல் ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல். வழக்கு பதிவு விசாரணை.

Update: 2021-06-19 05:44 GMT

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உரிய அனுமதியின்றி கல் ஏற்றி வந்த மினியை லாரியை தாசில்தார் பறிமுதல் செய்தார்.

நான்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி மற்றும் வருவாய் துறையினர் அரியகுளம் பகுதியிலுள்ள ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்காக சென்றுள்ளனர். அப்போது வரும் வழியில் பொன்னாக்குடியிலிருந்து நான்குநேரி அடுத்துள்ள காரங்காடு கிராமத்திற்கு கல் ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கல் ஏற்றி வருவதற்கு அனுமதி, ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அந்த லாரியைப் பறிமுதல் செய்த தாசில்தார் இசக்கிபாண்டி லாரியை மூலைக்கரைப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து லாரியை ஓட்டி வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த மணி மகன் சதீஷ் (22) என்பவர் மீது மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News