பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பொது மருத்துவ முகாம்
பாளையங்கோட்டை பர்கிட் மாநகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்துள்ள பர்கிட்மாநகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பர்கிட் கிளை சார்பாக பெண்கள், குழந்தைகள், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ முகாம் பர்கிட்மாநகரம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு அதன் தலைவர் சுபைர் முஹம்மது தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி, மாநகர் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் சிட்டி சேக் பாளை தொகுதி செயலாளர் சிந்தா, பர்கிட்மாநகரம் ஜமாத், துணை தலைவர் பேராசிரியர் சாகுல் ஹமீது, ஜமாத் செயலாளர் ஜஹாங்கிர். இளைஞர் அணி ஒருகினைப்பாளர் சௌபர் சாதிக், விமன்ஸ் இந்தியா முவ்மென்ட் மாவட்ட தலைவர் ரினோசா ஆலிமா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மருத்துவ சேவை அணி மாவட்ட துணை தலைவர் அப்துல் மஜீத். கிளை தலைவர் சுபைர் முஹம்மது, துணை தலைவர்கள் முஹம்மது அலி ஜின்னா, அப்துல் முத்தலிப். பொருளாளர் இஸ்மாயில் மைதின். கிளை செயல் வீரர்கள் பௌசுல் ஹக், பீர் மைதீன் நடுவக்குறுச்சி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர மூர்த்தி மேலும் நடுவக்குறுச்சி ஊராட்சி மன்ற துணை தலைவர் சேக் முகமது இலியாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அஹமது நவவி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பல் மருதுவர் அல் ஜைனப் பாத்திமா, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஆபிதா பர்வின், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செய்யது இப்ராஹிம், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் கிரிசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர்.
இதில் பர்கிட்மாநகரம் சுற்று வட்டார பகுதியை சார்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.