இளையார்குளத்தில் பைக் திருடனை விரட்டி பிடித்த மக்கள்: கைது செய்த போலீசார்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இளையார்குளத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளையார்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன்(48) என்பவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தை அவரது தோட்டத்திற்கு வெளியே நிறுத்தியுள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் சுப்ரமணியனின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வதை கண்டு சுப்பிரமணியனும் அவரது நண்பர் சுப்பையாவும் விரட்டிச் சென்று திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்தனர். உடனடியாக நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை திருடி நபர் நாசரேத் மணி நகரைச் சேர்ந்த இருதயராஜ் என்ற பூச்சி(46) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுப்ரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டு பைக் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.